சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 2017 ஆம் ஆண்டு முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதீப் கொலை வழக்கில், ஹரிகுமார், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகிய மூன்று பேருக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் ஹரிகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி விஜயகுமார் விதித்து உத்தரவிட்டார். கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து மூவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.