ஆவடி: கஞ்சா விற்பனை; வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

81பார்த்தது
ஆவடி: கஞ்சா விற்பனை; வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
பூந்தமல்லி பேருந்து நிலையம் பொதுக்கழிப்பிடக் கட்டிடம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின் அவர்கள் அங்கு சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த ஆண், பெண் இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்களின் பெயர் பிராஞ்சிமாளி, மஞ்சு சீர்கா என்பதும் இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ், ஷோல்டர் பேக்கை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்ததை தெரியவந்தது. 

தொடர்ந்து அதை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி