சென்னையை அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த பெண்கள் பயணித்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த ரவேகா (20) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி காட்டூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் மேலும் 20 பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி வேன் ஓட்டுநர் மோகன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.