திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் காலாடிபட்டி மார்க்கெட் பகுதியில் பெண் காவலர் நதியா பழம் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மது போதையில் இருந்த
அண்ணாமலை என்ற இளைஞர் தகாத வார்த்தையில் பேசி அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து நதியா அளித்த புகாரின் பேரில்,
அண்ணாமலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.