சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இன்று காலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயிலுக்குள் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவத்தால் மெட்ரோ ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.