திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூரில் கூலி தொழிலாளி முருகன் வீட்டில் வியாழன் இரவு பூட்டை உடைத்து 2 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் (28) மற்றும் திருவள்ளூர் அடுத்த அகரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.