திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் திருத்தணி ரயில் நிலைய நடைமேடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 2300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்தியவர்கள் தப்பி ஓடிய நிலையில், அரிசி மூட்டைகள் திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.