அரசுபள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27பேருக்கு வயிற்றுப்போக்கு

0பார்த்தது
அரசுபள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27பேருக்கு வயிற்றுப்போக்கு
திருத்தணி அருகே ரகுநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், சத்துணவு சாம்பாரில் தோசை மாவு கலந்ததால் 27 மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனகம்மா சத்திரம் சுகாதார நிலைய மருத்துவர் குழுவினர் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி