கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கூவம் ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது பழங்கால 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தகவல் பரவியதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சிலைகளைக் காண குவிந்தனர். திருவள்ளூர் தாசில்தார் பாலாஜி உத்தரவின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் மூன்று முதல் நான்கு அடி உயரம் கொண்ட சிலைகளை மீட்டு திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பத்திரமாக காப்பகப்படுத்தினர்.