திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அருகில் கொத்த குப்பம் ஊராட்சியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் செப்டம்பர் 26ஆம் தேதி 100 சவரன் நகை 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையர்கள் வீட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த வழக்கில் சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி, வாசு, சுபா , ஆகிய ஒரு பெண் உள்பட ஐந்து ஆண்களை மொத்தம் 6- பேரையும் பொதட்டூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 35 சவரன் நகை மற்றும் ரூபாய் 8. 75 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் 6 பேரையும் பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் 6 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.