பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி (34) என்பவரின் பெற்றோர், 2021-ல் புட்லூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (40) என்பவரை இரண்டாவது திருமணத்திற்காக பார்த்துள்ளனர். இந்துமதி, அசோக்குமாரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக அசோக்குமாரின் நடத்தை சரியில்லாததால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து இந்துமதி தனது அத்தை மகனான சந்திரபோஸ் (41) என்பவரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் தனது நண்பன் நித்தியானந்தம் (38) உடன் நேற்று இரவு அசோக்குமார் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த நித்தியானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரபோஸ் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.