கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் எஸ். சுதாகர், சிற்றம் ஜெ. சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி வி ரமணா, திமுக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லிவருவது குறித்து கண்டன உரையாற்றினார். இதில் பாஜக, பாமக, புரட்சி பாரதம், அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணை செயலாளர் எல். செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம். எழிலரசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் புங்கத்தூர் டி. தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.