திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 14-வது நாளாக 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். தேர்தலில் மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கும் அரசு, தங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பினர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையேல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியது போல் தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்றும், திமுக வெற்றி பெற பாடுபட்டது போல் வெற்றி பெறாமல் இருக்கவும் பாடுபட முடியும் என்றும் அரசை எச்சரித்தனர்.