திருத்தணி நகராட்சியில் பொதுமக்களை செங்கல் வைத்து தாக்கிய வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மக் புல் அஸ்லாம் என அடையாளம் காணப்பட்ட இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் யார், எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார், மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.