திருத்தணியில் நாளை ஆட்டோக்களுக்கு தடை

4பார்த்தது
திருத்தணியில் நாளை ஆட்டோக்களுக்கு தடை
திருத்தணி முருகன் கோயிலில் நாளை (பிப்.15) முகூர்த்த தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மலைமேல் ஆட்டோக்கள் செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மலைக்கோயில் நுழைவுப் பகுதி முதல் படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கோயில் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். இரு சக்கர வாகனங்களில் மலைமேல் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்ட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி