அதிமுக பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் நகராட்சி 1-வது வார்டில், விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் குடும்ப மாத கூடுதல் செலவு குறித்து வீடு வீடாக சென்று பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு, ஆண்டுக்கு ஆகும் கூடுதல் செலவினங்களை பில்-ஆக எடுத்துக் கொடுத்து, செலவினங்களை குறைக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.