பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவர் வினோஜ் பி செல்வம் ஆலோசனை

2பார்த்தது
பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவர் வினோஜ் பி செல்வம் ஆலோசனை
திருவள்ளூர் தொகுதியில் உள்ள பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சார குழு தலைவர் வினோஜ் பி செல்வம் ஆலோசனை நடத்தினார். மேல்நல்லாத்தூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், சென்னை போதை தலைநகரமாக மாறி வருவதாகவும் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை விமர்சித்த அவர், "நடிகராக இருந்து நடித்து அரசியலில் ஜெயித்து விடலாம் என்று எண்ணுகிறார் விஜய் இன்னொரு எம்ஜிஆர் பிறந்துவர முடியாது" என்றார். கரூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், ஸ்டார் ஹோட்டலில் கட்சி நடத்துபவர்கள் தலைமைச் செயலகத்தையும் ஓட்டலுக்கு மாற்றினாலும் ஆச்சரியமில்லை என்றும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறினார்.