நலன் காக்கும் ஸ்டாலின் முகாமின் நிறைவு விழா: கேக்வெட்டினர்

490பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட 45 இடங்களில் தமிழக அரசின் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது மருத்துவம், எலும்பு முறிவு, இருதய மருத்துவம், நரம்பியல், கண் சிகிச்சை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று பயனடைந்தனர். முகாம் நிறைவில், திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் நடைபெற்ற 45-ஆவது மருத்துவ முகாமில் மாவட்ட மருத்துவ அலுவலர் பிரியா ராஜ் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பிரியா ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி