திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகனிடம், நிலம் வாங்கி வீடு கட்டிய நிலையில், மேலும் மனையையும் வாங்க பணம் கொடுத்துள்ளார். நிலப் பிரச்சினை தீர்ந்ததும் பத்திரம் தருவதாகக் கூறிய கஜேந்திரன், நிலத்தை அளவீடு செய்யும்போது அருகில் உள்ள வீட்டுமனையைச் சேர்ந்த மதன், முருகனின் நிலத்தையும் சேர்த்து அளவீடு செய்துள்ளார். இது குறித்து கேட்டபோது, மதன் முருகனை தகாத வார்த்தைகளால் பேசி, 'ஜேசிபி மூலம் வீட்டை இடித்துவிடுவேன்' என மிரட்டியுள்ளார். இது குறித்து முருகன் போலீசில் புகார் அளித்துள்ளார். மறுநாள், மதனின் உறவினர் சூர்யா, முருகனின் கடைக்குள் புகுந்து, 'உயிரோடு விடமாட்டேன், எங்கள் மீதே புகார் கொடுக்கிறாயா' எனக் கேட்டு, மார்பில் காலால் உதைத்துத் தாக்கி, கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். மார்பில் பலத்த காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.