வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசுக்கள் அதிகமாக இருந்ததால், நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதனால், அரசுப் பணிக்காக வந்த ஊழியர்கள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி அலுவலகத்திலிருந்து வெளியே ஓடினர். சுகாதார ஆய்வாளர் மோகன், கொசுக்கள் குறிப்பிட்ட நேரங்களில் உலா வருவதாகவும், அப்போது மருந்து அடித்தால் மட்டுமே அவை சாகும் என்றும் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.