வைக்கோல் ஏற்றிவந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீ விபத்து

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் பகுதியைச் சேர்ந்த பழனி, டிராக்டரில் அதிகத்துார் பகுதிக்கு வைக்கோல் ஏற்றிச் சென்றபோது, கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதில் டிராக்டரும் வைக்கோலும் முழுமையாக எரிந்து நாசமானது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி