மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

654பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் அதிமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிராம மக்களின் சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார். மேலும், கோரிக்கைகள் நிறைவேற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி