அடிக்கடி பழுதாகும் பேருந்துகள்: மக்கள் அவதி

1பார்த்தது
அடிக்கடி பழுதாகும் பேருந்துகள்: மக்கள் அவதி
திருவள்ளூர் பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 82சி அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்கின்றன. இதனால், திருவள்ளூர், மேல்நல்லாத்துார், போளிவாக்கம், செங்காடு, ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவியர் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். போக்குவரத்து கழகத்தில் உதிரிபாகங்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி