அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் போராட்டம்

379பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், முறையாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாகவும், உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சம்பளம் வழங்கப்படாதது குறித்து கேட்டால், பணியாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்ய முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி