கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப் பேட்டையில் உள்ள கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி. மகேந்திரன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் பங்கேற்று ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.