திருத்தணி அருகே பீரகுப்பம் பகுதியில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கக் கோரி மக்கள் பல ஆண்டுகளாக வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் தண்ணீர் தேடி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு வந்த புள்ளிமான், தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மான் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறந்த மானை கைப்பற்றி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்ய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.