திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறை சார்பில் 5-வது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாமு. நாசர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் 1 கோடியே 31 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளைக் கொண்டாட உதவுவதாகவும் தெரிவித்தார். தோல்வி பயத்தில் இதை அறிவித்துள்ளாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. சேலத்தில் விஜய் ரசிகர் மன்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்துக் கேட்டபோது, விஜய் 50-வது செஞ்சுரி அடித்துள்ளார் எனவும், அரை சதம் அடித்துள்ளார் எனவும் கிண்டலாகக் கூறிச் சென்றார்.