திருத்தணியில் உள்ள பாலாஜி நகர் கருமாரியம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதிக்கு தார் சாலை அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, உடனடியாக சாலை வசதியுடன் மழைநீர் வடிகால்வாயும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.