திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர தயாராகி வருகின்றனர். குறிப்பாக, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கல்வி மற்றும் குறைந்த கட்டணம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்க குவிந்து வருகின்றனர்.