திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொது விடுமுறை தினத்தில் சாமி தரிசனத்திற்கு குவிந்த பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பார்க்கிங் நிரம்பியதால், காரை எடுக்கும்போது மலைச் சரிவில் கார் பின்னோக்கி வந்து, 5 மாத கர்ப்பிணி சுமிதா மீது ஏறியது. இதனால் அவர் இடுப்பு, முகம், கால்களில் படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் அவரை காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.