பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன வாயிற்கூட்டம்

687பார்த்தது
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டலம் சார்பில், மண்டல துணை மேலாளர் ஏ. சீனிவாசனின் தொழிலாளர் விரோதப் போக்கு, நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து திருவள்ளூரில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது. சீனிவாசன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்களின் பேரில் 7 மண்டலங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பெண் வன்கொடுமை மற்றும் லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து தமிழக அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே 2 முறை இடமாற்றம் செய்யப்பட்ட சீனிவாசனை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், இல்லையேல் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி