திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆண்டவர் நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை இருந்த இடத்தில் பொதுமக்கள் கற்களை வைத்து தற்காலிக தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.