திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் கம்பர் தெருவில், மழைநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட சிறுபாலம், கடந்த பத்து நாட்களுக்கு முன் தனியார் குடிநீர் டிராக்டர் சென்றபோது உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.