9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்: கைது

2பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம், கிராம உதவியாளர் வாரிசுகளுக்கு பணி, அனைத்து பணியிடங்களையும் நிரந்தரம் செய்தல், வருவாய்த்துறை அடிப்படைக் கட்டமைப்புகளை வரைபடுத்துதல், தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் திருத்தம், கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை மற்றும் நில அளவை துறை அலுவலர்கள் திருவள்ளூர் ஆட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறியலை கைவிடாததால், காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி