ஆர்.கே.பேட்டை சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

588பார்த்தது
ஆர்.கே.பேட்டை சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு, பணிகள் முடிவடைந்த பின்னரும் இதுவரை மீண்டும் நிறுவப்படவில்லை. இதனால், அந்த சாலை பகுதி இரவு நேரங்களில் முழுமையாக இருளில் மூழ்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருத்தணி அருகே உள்ள இந்த பகுதியில், மின்விளக்கு இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி