திருவள்ளூர், கம்பர் தெருவில் சிவகார்த்திகேயன் என்ற பெயரில் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் ராஜேஷ் என்பவரின் அலுவலகத்தில், மர்ம நபர் ஒருவர் புகுந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றார். இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருடனை உடனடியாக பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.