திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் கடந்த 27 நாட்களில் ₹1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 116 ரூபாய் ரொக்கமாகவும், 713 கிராம் தங்கமாகவும், 8 கிலோ 459 கிராம் வெள்ளியாகவும் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்த உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 5ஆம் படை வீடுகளில் ஒன்றாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.