திருத்தணி: மின்கம்பத்தில் மோதி இரண்டாக உடைந்த லாரி

1232பார்த்தது
திருத்தணி: மின்கம்பத்தில் மோதி இரண்டாக உடைந்த லாரி
திருத்தணி அருகே, தனியார் பேருந்துக்கு வழிவிட முயன்றபோது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கன்டெய்னர் லாரி இரண்டாக உடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் திராவிடராஜ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து புதிய மின்கம்பம் அமைத்து மின் வினியோகத்தை சீரமைத்தனர். திருத்தணி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி