திருத்தணி நகராட்சி, சித்துார் சாலையில் நேற்று (நவ.22) காலை, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 'டாடா ஏஸ்' வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் மற்றும் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.