திருத்தணி: ஆட்டோ கவிழ்ந்து பயங்கர விபத்து

1பார்த்தது
திருத்தணி: ஆட்டோ கவிழ்ந்து பயங்கர விபத்து
திருத்தணி ஒன்றியம் பி.சி.என்.கண்டிகை கிராமத்தில் நேற்று காலை வேலூர் மாவட்டம் சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (50) என்பவர் தர்ப்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய ஆட்டோவில் வந்துள்ளார். எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில், முனியப்பன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொக்லைன் இயந்திரம் மூலம் ஆட்டோ மீட்கப்பட்டது. திருத்தணி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி