திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டி பள்ளி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மின்சார தடையால் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் திருத்தணி-பொதட்டூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என சமரசம் செய்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.