திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை வட்டம், எரும்பி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் மின்வெட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், எரும்பி
போக்குவரத்து நிலையம் அருகே சோளிங்கர்-சித்தூர் நெடுஞ்சாலையில் கிராம பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின்சார பழுது நீக்கப்பட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.