திருவள்ளூர் உழவர் சந்தை அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாத உதவித்தொகையை பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கக் கோரி 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் ரூ. 6000 முதல் 15,000 வரை, தெலுங்கானாவில் ரூ. 4000, புதுச்சேரியில் ரூ. 4000 முதல் 5700 வரை, திரிபுராவில் ரூ. 5000, ஹரியானாவில் ரூ. 3500, டெல்லியில் ரூ. 3000 வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ. 1500 மற்றும் ரூ. 2000 மட்டுமே வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என எச்சரித்தனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.