திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி பெண்கள் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக வேலை வழங்கப்படாததால் குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.