அம்பத்தூர் காவல் நிலையத்தில் பெண் தர்ணா போராட்டம்

997பார்த்தது
அம்பத்தூர் காவல் நிலையத்தில் பெண் தர்ணா போராட்டம்
கொரட்டூரைச் சேர்ந்த 40 வயது இளம்பெண், தனது இரண்டாவது கணவர் சத்யா (45) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட சத்யா, தனது முதல் மனைவிக்கு பிறந்த 16 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளியே வந்த சத்யா, வேறொரு பெண்ணுடன் பழகி வீட்டை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி