ஆவடி: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது : கஞ்சா பறிமுதல்

74பார்த்தது
ஆவடி: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது : கஞ்சா பறிமுதல்
ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படியும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் பெங்களூர் முதல் சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு பாரிவாக்கம் சிக்னல் அருகே உள்ள காலியிடத்தில் கஞ்சாவை விற்பனை செய்ய ஆண் நபர் ஒருவர் எடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 

பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர்கள் கொண்ட குழு சம்பவ இடம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமாக கருப்பு நிற ஷோல்டர் பேக்குடன் திரிந்துக்கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் 

எதிரி முகமது ரில்வான் (வ/25) த/பெ அப்துல் லத்திஃப், வள்ளலார் நகர், தண்டுரை, பட்டாபிராம் சென்னை என்பதும், கஞ்சாவை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து வாங்கி வந்து பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து எதிரியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி