
திருத்தணி: கொளுந்துவிட்டு எரிந்த சொகுசு கார்
திருத்தணி நகராட்சியில் தனியார் தூய்மைப் பணி பிரிவில் சூப்பர்வைசராக பணிபுரியும் தினேஷின் சொகுசு கார், டிரைவர் அஜித் ஓட்டிச் சென்றபோது திடீரென இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, அஜித் காரிலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

































