திருவள்ளூர் மாவட்டத்தில் 7331 அவசர அழைப்புகளுக்கு 108சேவை

236பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் 7331 அவசர அழைப்புகளுக்கு 108சேவை
108 அவசர வாகன சேவை 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு இலவசமாக செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் மாத இறுதி வரை, இந்த சேவை மூலம் மொத்தம் 7,331 அவசர அழைப்புகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்து பாதிப்புகள் 2,124, கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பான உதவிகள் 664, பச்சிளம் குழந்தைகள் 40, குழந்தைகள் நலம் 13 மற்றும் இதர அவசர மருத்துவ உதவிகள் 4,490 என சேவை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி