திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இதில் நீலகிரி எம்பியும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ஆ. ராசா கலந்துகொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க ஒற்றுமையுடன் அனைவரும் உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகி உட்பட 15 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ஆ. ராசா சால்வை அணிவித்து வரவேற்றார்.