உடல் வலி நிவாரண மாத்திரைகள் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

0பார்த்தது
வானகரம் பகுதியில் தடை செய்யப்பட்ட உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, வானகரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஓடமா நகர் பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனில் இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (21) மற்றும் சந்துரு (அஜித்) (22) ஆகியோரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் 510 உடல் வலி நிவாரண மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வாகனத்தில் சவாரி செல்வது போல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி